ஏ-செஸ் நிறுவனத்தின் மேக்ஸ் புரோ எம்1
ஏ-செஸ் இந்தியாவில் தனது தயாரிப்புகளின் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
தைவானைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஏ-செஸ் இந்தியாவில் தனது தயாரிப்புகளின் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த வாரம் தனது ஜென்போன் மேக்ஸ் புரோ எம்1 மாடலில் நீல நிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10,999. இதை பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வாங்கலாம்.
ஏற்கனவே இந்த மாடலில் கறுப்பு, கிரே ஆகிய வண்ணங்களில் போன்கள் கிடைக்கின்றன. தற்போது நீல நிற போனும் சந்தைக்கு வந்துள்ளது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்.ஓ.சி. உள்ளது. இதில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. மேலும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது ரூ.12,999க்கும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது ரூ.14,999 விலையிலும் கிடைக்கிறது.
இதில் இரண்டு நானோ சிம்கார்டுகளை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளது. இதில் 5.99 அங்குல தொடு திரை உள்ளது சிறப்பம்சமாகும்.
இதில் 13 மெகா பிக்ஸெல் கேமரா 2.2 அபெர்சர் போக்கஸ் வசதியுடன் உள்ளது. முன்புறத்தில் 8 மெகா பிக்ஸெல் கேமரா இருப்பதால் செல்பி படங்களும் சிறப்பாக எடுக்க முடியும். இதில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பதால் நீண்ட நேரம் பேச, பாட்டு கேட்க, படம் பார்க்க முடியும். 4 ஜி வோல்டே, வை-பை 802.11, புளூடூத் 4.2 ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி., 3.5 மி.மீ. ஹெட்போன் ஆகியனவும் வழங்கப்படுகின்றன.
இதன் முன்புறம் ஜென்போன் மேக்ஸ் புரோ எம்1 மாடலில் முகம் அடையாளம் உணர் சென்சார்களும், விரல் ரேகை உணர் சென்சாரும் உள்ளது. இதன் எடை 180 கிராம் மட்டுமே.
Related Tags :
Next Story