மாவட்ட செய்திகள்

குறைந்த விலை செல்போன் + "||" + Low price cellphone

குறைந்த விலை செல்போன்

குறைந்த விலை செல்போன்
உயர் ரக ஸ்மார்ட்போன்கள் வந்த வண்ணம் இருந்தாலும், விலை குறைவான போனின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
குறைந்த வருவாய் பிரிவினரைக் கருத்தில் கொண்டு டெல்லியைச் சேர்ந்த உள்ளூர் மொபைல் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி. கார்ப்பரேட் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் ‘டிடெல்’ என்ற பிராண்டு பெயரில் செல்போன்களைத் தயாரித்து வருகிறது. தற்போது டி 1 ஸ்லிம்’ எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,199 ஆகும். இந்த விலையில் டிஜிட்டல் கேமரா மற்றும் எல்.இ.டி. பிளாஷ் வசதியுடன் வந்திருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.

இது 2.8 அங்குல திரையைக் கொண்டது. எல்.சி.டி. திரையுடன் 1,500 எம்.ஏ.ஹெச். பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இதன் நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டின் மூலம் 16 ஜி.பி. வரை விரிவாக்கிக் கொள்ள முடியும். நீலம், தங்க நிறம், ரோஜா சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் புளூடூத் வசதியுடன் வந்துள்ளது.

இந்த போனை B2BAdda.com என்ற இணையதளத்திலிருந்து வாங்கலாம். இந்நிறுவனம்தான் கடந்த ஆண்டு ரூ.299-க்கு போனை அறிமுகப்படுத்தி சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.