பிட்னெஸ் ஸ்மார்ட் வாட்ச்கள்
இப்போதெல்லாம் ஸ்மார்ட் வாட்ச்கள் நேரம் காட்டுவதோடு மட்டுமின்றி பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டதாக வெளி வந்துள்ளது.
ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படும் ஸ்மார்ட் வாட்ச்கள் முதல் உடல் ஆரோக்கியத்திற்கான பிரத்யேக வாட்ச்களும் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அவற்றைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
பொதுவாக ரூ.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட் வாட்ச்கள் ஓரளவு பயனுள்ளவையாக உள்ளன. வழக்கம்போல ஆப்பிள் பிராண்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை மிக அதிகமாகவே உள்ளது.
அமேஸ்பிட் பிப் (Amazfit Bip)
சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் ‘அமேஸ்பிட் பிப்’ எனும் ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 5,499.
இந்த வாட்ச்சை ஒரு முறை சார்ஜ் செய்தாலே ஒரு மாதம் வரை செயல்படும். இது நீர்புகா தன்மை கொண்டது. இதனால் 30 மீட்டர் ஆழம் வரை நீங்கள் இதை அணிந்து நீந்திச் செல்லலாம். ஆனால் இதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான செயலிகளே (ஆப்) உள்ளன. மேலும் ஆப் ஸ்டோர் கிடையாது, இதன் திரையும் (1.28 அங்குலம்) சற்று தெளிவற்று இருப்பது இதிலுள்ள பாதக அம்சமாகும். அதேசமயம் வாட்ச்சை ஆப் செய்த பிறகும் இதில் நேரத்தை பார்க்க முடிவது சாதகமான விஷயம். இது அதிகம் பிரதிபலிக்காத தன்மை கொண்டதாக இருப்பதால் வெளிப்புறச் சூழலில் இதைப் பார்க்கும்போது கண் கூசாது.
நேரம் தெளிவாக தெரிவதால் கண்களை சுருக்கி சிரமப்பட்டு மணி பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது. இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலும் இதன் பேட்டரி 41 சதவீதம் வரை மீதமிருக்கும். இதில் ஒரே ஒரு பட்டன் மட்டுமே இருக்கும். இதைக் கொண்டு வாட்ச் செயல்பாடுகளை திறந்து மூட முடியும். ஸ்மார்ட்போனுடன் இணைப்பது உள்ளிட்ட மற்ற உபயோகங்களுக்கு இதன் தொடு திரையை பயன்படுத்தலாம். இதில் உள்ள பிளே ஸ்டோரிலிருந்து பிட்னெஸ்சுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தலாம். அது தவிர விளையாட்டிற்கும் சில செயலிகள் உள்ளன.
வானிலை தகவல், நடைபயிற்சி விவரங்கள், உடல் எடை தகவல்கள், தூங்கும் நேரம் உள்ளிட்ட பல அம்சங்களும் இதில் உள்ளன. அன்றாடம் தேவையான விஷயங்களை படிப்பதற்கு எளிதாகவே உள்ளது. அத்துடன் ஸ்மார்ட்போனில் வரும் தகவல்களை இதில் தெரிந்து கொள்ள முடியும். ஜியோமியின் எம்ஐ பிட் செயலி உள்ளது. இதை புளூடூத் மூலம் செயல்படுத்த முடியும். இளைஞர்களைக் கவரும் வகையிலான தோற்றத்தோடு இது இருப்பது கூடுதல் சாதகமாகும். கொடுக்கும் விலைக்கு நிச்சயம் இது சிறப்பான செயல்பாடுகளைத் தரும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (Apple Watch Series 3)
அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்மார்ட்போன் நிறுவனத் தயாரிப்புதான் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 ரகமாகும். இது மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் தரமாக உள்ளது. செல்போனுடனான இணைப்பு மிக விரைவாக இருக்கும். இதன் திரை மிகத்தெளிவாக உள்ளது. இது 1.60 அங்குலம் கொண்டதாயிருப்பது சாதகமானது. இதன் விலை ரூ.32,470. விலை அதிகம் என்றாலும் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் மட்டுமே தாக்குப்பிடிக்கிறது என்பது இதில் உள்ள பாதக அம்சமாகும். இருப்பினும் ஆப்பிள் பிராண்ட் என்பதற்கு உண்டான கம்பீரமான தோற்றம் மற்றும் பிராண்ட் வேல்யூ இருப்பதை மறுக்க முடியாது.
Related Tags :
Next Story