வாட்டர் புரூப் ஸ்பீக்கர்


வாட்டர் புரூப் ஸ்பீக்கர்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:22 AM GMT (Updated: 5 Sep 2018 10:22 AM GMT)

இப்போதெல்லாம் புளூடூத்துடன் இணைந்து செயல்படுத்தக்கூடிய ஸ்பீக்கர்கள் சந்தையில் ஏராளமாக வந்துள்ளன.

குறைந்த விலையில் மிகவும் தரமான அதுவும் நீர் புகாத தன்மை கொண்ட ஸ்பீக்கர்கள் மிகவும் அரிதாகவே வருகின்றன. அந்த வகையில் நாய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அக்வா மினி’ ஸ்பீக்கர் மிகச் சிறப்பான ஒன்றாகும். ரூ. 1,999 விலையில், கொடுக்கும் பணத்திற்கு உரிய செயல்பாடுகளைக் கொண்டதாக இது விளங்குகிறது.

இந்நிறுவனம் முதல் முறையாக வாட்டர் புரூப் ஸ்பீக்கரை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் முதல் முயற்சியே சிறப்பாக அமைந்துள்ளதை இதன் செயல்பாடுகள் மூலம் அறியலாம்.

பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றம் கொண்டதாக இந்த ஸ்பீக்கர் காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புறம் கடினமான பிளாஸ்டிக் மற்றும் ரப்பரால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உலோக கம்பிகள் முன்புறமும், பின்பகுதியிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

இதன் மேல்பகுதியில் பவர் பட்டன்கள், பிளே பேக் கண்ட்ரோல் ஸ்விட்சுகள் உள்ளன. இவை வலிமையான ரப்பர் கோட்டிங் கொண்டிருந்தாலும் இதைக் கையாள்வது மிகவும் எளிது. இதன் பக்கவாட்டில் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்டுக்கான பகுதி உள்ளது. அத்துடன் ‘ரீ செட்’ பின் துவாரம் மற்றும் துணை போர்ட் சொருகுவதற்கான இடவசதியும் உள்ளன. ஸ்பீக்கரின் வலதுபுறத்தில் மென்மையான கைப்பிடி உள்ளது. இதை நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொங்க விட்டுக் கொள்ளலாம்.

இது 220 கிராம் எடை கொண்டது. இதனால் அதிக எடையாக இருக்குமோ என்று கவலைப்பட தேவையில்லை. திடீரென சாரல் அல்லது மழைத் துளிபட்டாலும் இது மற்ற ஸ்பீக்கரைப் போல கெட்டுப் போகாது. நீர் புகா தன்மைக்கேற்ப இதில் பிளாஸ்டிக் வெளிப் பாகங்கள் உள்ளன. வழக்கமான கறுப்பு நிறம் தவிர சில வண்ணங்களிலும் இது வெளிவந்துள்ளது. இத்துடன் 3.5 மி.மீ. ஸ்டீரியோ கேபிள், மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் கேபிள் மற்றும் இதை செயல்படுத்துவதற்கான குறிப்பு அடங்கிய கையேடும் அளிக்கப்படுகிறது.

அக்வா மினி ஸ்பீக்கர் புளுடூத் 4.2 உடன் இணைக்க முடியும். இது மிக குறைவான மின் சக்தியை எடுத்துக் கொள்ளும். இதனால் இதன் பேட்டரி நீண்ட நேரம் செயல்படும். இதில் பண்பலை ரிசீவரும் உள்ளதால், பண்பலை நிகழ்ச்சிகளையும் கேட்டு ரசிக்க முடியும்.

முதலில் இது செயல்படத் தொடங்கும்போது நாம் எதிர்பார்த்த அளவிற்கு இசை கேட்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு இதன் முழு வீச்சிலான இசையை கேட்க முடியும்.

Next Story