மானூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதல்; டிராக்டர் டிரைவர் பலி


மானூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதல்; டிராக்டர் டிரைவர் பலி
x
தினத்தந்தி 6 Sept 2018 2:30 AM IST (Updated: 5 Sept 2018 7:47 PM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிராக்டர் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

மானூர்,

மானூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிராக்டர் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

டிராக்டர் டிரைவர்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்தவர் முத்து (வயது 47). டிராக்டர் டிரைவர். சம்பவத்தன்று இவர் ராமையன்பட்டியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மானூர் அருகே உள்ள சிவாஜி நகர் பஸ் நிறுத்தத்திற்கு தென்புறம் சென்றபோது, அந்த பதியில் வந்த கார், முத்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட முத்து, பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் முத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முனீஸ் என்ணு முத்து விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story