நெல்லையில், 4–வது நாளாக உடற் தகுதி தேர்வு ஆண் போலீஸ் பணிக்கு கயிறு ஏறுதல் போட்டி


நெல்லையில், 4–வது நாளாக உடற் தகுதி தேர்வு ஆண் போலீஸ் பணிக்கு கயிறு ஏறுதல் போட்டி
x
தினத்தந்தி 6 Sept 2018 2:45 AM IST (Updated: 5 Sept 2018 8:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 4–வது நாளாக உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் ஆண் போலீஸ் பணிக் தேர்வில் கயிறு ஏறுதல் போட்டி நடந்தது.

நெல்லை, 

நெல்லையில் 4–வது நாளாக உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் ஆண் போலீஸ் பணிக் தேர்வில் கயிறு ஏறுதல் போட்டி நடந்தது.

போலீஸ் பணிக்கு... 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2–ம் நிலை போலீசார் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 2,003 ஆண்களும், 805 பெண்களும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு உடல் திறன் தேர்வு, பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2, 3–ந் தேதிகளில் ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.

நேற்று முன்தினம் பெண்களுக்கான உடல் திறன் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க நெல்லை மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 805 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதில் 528 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், எடை ஆகியவை அளவீடு செய்யப்பட்டன. பின்னர் 400 மீட்டர் ஓட்டத்திறன் தேர்வு நடத்தப்பட்டது.

4–வது நாளாக... 

நேற்று 4–வது நாளாக உடற்தகுதி தேர்வு நடந்தது. பணியை சென்னை போலீஸ் பயிற்சி அகாடமி ஐ.ஜி. பாஸ்கரன், சீருடை பணியாளர் தேவ்வாணைய போலீஸ் சூப்பிரண்டு ரூபேஸ்குமார் மீனா, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் ஆகியோர் நேரடியாக கண்காணித்தனர்.

ஆண் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு காயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்கிறது.

Next Story