மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள்


மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள்
x
தினத்தந்தி 6 Sept 2018 3:00 AM IST (Updated: 6 Sept 2018 6:06 AM IST)
t-max-icont-min-icon

கடல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக போதிய மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தாழங்குடா உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அதேபோல் கடந்த 2 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தங்கள் படகுகளை துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் போதிய அளவில் எங்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. டீசல் செலவுக்கு கூட மீன்கள் கிடைக்காததால் நாங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர் என்றார்.


Next Story