பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் - கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் கவர்னருக்கு மனு


பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் - கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் கவர்னருக்கு மனு
x
தினத்தந்தி 6 Sept 2018 4:30 AM IST (Updated: 6 Sept 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகள் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் நேற்று கவர்னருக்கு மனு அனுப்பப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை, கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவருடைய வீட்டில் வைத்து மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. அவருடைய நினைவு நாளையொட்டி, கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு மவுரியா சர்க்கிளில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், அந்த அறக்கட்டளை சார்பில் கவர்னர் வஜூபாய்வாலாவுக்கு கோரிக்கை மனுஅனுப்பி வைக்கப்பட்டது.அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூத்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு, துப்பாக் கியால் சுட்டுக்கொலை செய்த நபர் உள்பட பலரை கைது செய்து உள்ளனர். இவர்கள் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் சனதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புகளால் வழிகாட்டுதலின் படி செயல்பட்டுள்ளனர்.

இவர்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கலபுரகி ஆகியோரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருங்காலத்தில் மேலும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது. எனவே, பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். அத்துடன், அமைதி காப்பது, சகிப்புத்தன்மை, மரியாதை, அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பு ஆகியவை பற்றி இளம்தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு

Next Story