குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்க அனுமதி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்க அனுமதி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2018 4:15 AM IST (Updated: 6 Sept 2018 8:18 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்க கலெக்டர் பிரசாந்த் வடநேரே அனுமதி அளித்துள்ளார்.

நாகர்கோவில்,

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன. எனவே நீர் நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

அதாவது கன்னியாகுமரி, சொத்தவிளை, சின்னவிளை, சங்குத்துறை, வெட்டுமடை, மிடாலம், தேங்காப்பட்டணம் ஆகிய கடலிலும், பள்ளிகோணம் அணை, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு என 10 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story