மாவட்ட செய்திகள்

சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார் + "||" + University of Sankara New building Pranab Mukherjee opened up

சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்

சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்
காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிதாக 4 அடுக்குமாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
காஞ்சீபுரம்,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சங்கரா பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன், சங்கரா பல்கலைக்கழக முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், பல்கலைக்கழக துணை வேந்தர் விஷ்ணுபோத்தி, சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து, காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை தந்த பிராணாப் முகர்ஜி, முக்தியடைந்த காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரது பிருந்தாவனத்திற்கு சென்று வணங்கினார். பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் நகராட்சிக்கு ரூ.7.30 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
நாமக்கல் நகராட்சிக்கு ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...