கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை


கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Sep 2018 10:15 PM GMT (Updated: 6 Sep 2018 8:14 PM GMT)

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர், 

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோட்டி என்கிற கோட்டீஸ்வரன். ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலப்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவருடைய மகன் சாய்சரத் உள்பட சிலரை கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாய்சரத் ஜாமீனில் வெளியே வந்து சென்னைக்கு வேலைக்கு சென்றுவந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெளியே சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய சாய்சரத் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார்.

நேற்று காலை நீண்டநேரமாகியும் அவர் கீழே இறங்கி வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது சாய்சரத் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சாய்சரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story