ஊஞ்சலில் விளையாடிய போது சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு


ஊஞ்சலில் விளையாடிய போது சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 7 Sept 2018 4:27 AM IST (Updated: 7 Sept 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

வசாயில், ஊஞ்சலில் விளையாடிய போது, சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு டோங்கர்பாடாைவ சேர்ந்த சிறுவன் ராகேஷ் யாதவ் (வயது12). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு ஊஞ்சலில் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம். இதற்காக வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி வைத்திருந்தான்.

நேற்றுமுன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், சாப்பிட்டு விட்டு ஊஞ்சலை சுற்றி விளையாடி இருக்கிறான். அப்போது, துரதிருஷ்டவசமாக சேலை அவனது கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் மூச்சு திணறி அவன் பரிதாபமாக இறந்து போனான்.

இதை வீட்டில் இருந்த அவனது தாய் கவனிக்கவில்லை. அவர் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசி கொண்டிருந்து உள்ளார்.

வெகு நேரத்துக்கு பின்னர் தான் மகன் ஊஞ்சலில் கழுத்து இறுக்கி இறந்து கிடப்பதை பார்த்து உள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தகவல் அறிந்து வந்த வாலிவ் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்கு ள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story