விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது


விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது
x
தினத்தந்தி 6 Sep 2018 11:34 PM GMT (Updated: 6 Sep 2018 11:34 PM GMT)

மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மக்கள் அலங்கார பொருட்களை ஆர் வமுடன் வாங்கி செல்கின்றனர்.

மும்பை,

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டா டப்படுகிறது. குறிப்பாக நிதி தலைநகரான மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டும். 11 நாட்கள் ஊரே திருவிழா கோலம் காணும்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 13-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி ஆனந்த சதுர்த்தியுடன் நிறைவு பெறுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மும்பையில் உள்ள மார்க் கெட்டுகளில் விற் பனை களை கட்ட தொடங்கி உள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு தேவைப்படும் பொருட் களுக்கு பிரசித்தி பெற்ற தாதா், லால்பாக் மார் க்கெட்டுகளில் உள்ள கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. பொதுமக்கள் கடைகளில் அலங்கார பொருட்கள், வீட்டில் வைக்கப்படும் சிறிய விநாயகர் சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்கள், காகித அலங்கார மேடைகள், பட்டு துணி உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இதேபோல பிளாஸ்டிக் தடை காரணமாக தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் இல்லாமல் காகிதத்தால் செய்யப்பட்ட அலங்கார பொருட்களும் பொதுமக்களை அதிகம் கவர்ந்தது.

தாதர், லால்பாக் தவிர மலாடு, அந்தேரி, செம்பூர், தானே, டோம்பிவிலி, கல்யாண், வாஷி, பாண்டுப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்களிலும் விநாயகர் சதுர்த்தி விற்பனை சூடுபிடித்து உள்ளது.


Next Story