ஆனியன் இல்லை, இது சனியன்..!


ஆனியன் இல்லை, இது சனியன்..!
x
தினத்தந்தி 7 Sep 2018 9:25 AM GMT (Updated: 7 Sep 2018 9:25 AM GMT)

விஞ்ஞானிகளும் விவசாயிகளும் பல ஆண்டுகளாக முயற்சித்து, கண்ணீர் வராத வெங்காயங்களை உருவாக்கி உள்ளனர். இதற்குப் பெயர் ஆனியன் இல்லை. வித்தியாசமான வெங்காயம் என்பதால் ‘சனியன்’ (Sunion) என வித்தியாசமாகவே பெயரை வைத்திருக்கிறார்கள்.

1980-ம் ஆண்டிலிருந்து வாஷிங்டனில் பரிசோதனை முயற்சியாகத் தொடர்ந்து விளைவிக்கப்பட்ட வெங்காயம், தற்போதுதான் கண்ணீர் வரவழைக்காத தன்மைக்கு மாற்றமடைந்திருக்கிறது.

சாதாரண வெங்காயத்தின் சுவை, இதில் மென்மையாக இருக்கும். இனிப்பு அதிகமாக இருக்கும். கிலோ கணக்கில் இந்த வெங்காயங்களை நறுக்கினாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராது. உருளைக்கிழங்குபோல் காட்சியளிக்கிறது இந்த வெங்காயம். வெள்ளரிக்காயைபோல் இந்த வெங்காயத்தை அப்படியே சுவைக்க முடியும். தற்போது இந்த வெங்காயம் வாஷிங்டனில் மட்டுமே கிடைக்கிறது. வெங்காயத்தின் பெருமை பிரமாதமாக இருந்தாலும், பெயர்தான் நமக்கு கொஞ்சம் இடிக்கிறது..!

# ஆனியனுக்கு ஆராய்ச்சி செய்தமாதிரி, அதோட பேருக்கும் ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்கலாம்.

Next Story