வாலிபருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது


வாலிபருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2018 3:45 AM IST (Updated: 7 Sept 2018 10:58 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 26). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாமுவேல், வேலாயுதம் (20), மணிகண்டன், தமிழ்மணி ஆகியோர் பசுபதியை மிரட்டி அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

அதற்கு அவர் பணம் தர மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பசுபதியை தகாத வார்த்தையால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கியுள்ளனர். அப்போது வேலாயுதம் கத்தியால் பசுபதியின் தலையில் குத்தி உள்ளார்.

பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் காயம் அடைந்த பசுபதி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பசுபதி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வேலாயுதத்தை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சாமுவேல், மணிகண்டன், தமிழ்மணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story