சிவகிரியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகிரி எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரி,
சிவகிரி எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளன மண்டல தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் செல்லமுத்து, செயலாளர் தங்கவேல், பொருளாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயற்குழு உறுப்பினர் சுவாமிநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தவணை தொகையின் மீதும், தாமதக்கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக மாற்ற வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்.