மாவட்ட செய்திகள்

கூடலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Masters graduate teachers Demonstration

கூடலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூர்,

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாணவ– மாணவிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை கட்டாயப்படுத்துவதை கண்டித்து கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சரவணக்குமார், பொருளாளர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எபி பெனன்ட் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி கல்வித்துறையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கூடலூர் செயலாளர் நல்லக்குமார் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜாக்டோ–ஜியோவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ–ஜியோவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் முற்றுகையிட்டனர்.
3. கடலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
4. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நாளை மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
5. சிவகங்கையில் ஜாக்டோ –ஜியோவினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் ஜாக்டோ–ஜியோவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசிக்கப்பட்டவை