ஜெயிலுக்கு செல்லும் வழியில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம் - 2 சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம்


ஜெயிலுக்கு செல்லும் வழியில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம் - 2 சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Sep 2018 11:15 PM GMT (Updated: 8 Sep 2018 10:00 PM GMT)

குடியாத்தத்தில் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லும்போது போலீ சாரை கீழே தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடினார். இது தொடர்பாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் கிராமத்தை சேர்ந்த நசீர் என்பவரது மகன் அகமது பாஷா (வயது 28). இவர் மீது பேரணாம்பட்டு மற்றும் ஆம்பூர் பகுதியில் திருட்டு தொடர்பான வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் பேரணாம்பட்டு பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக பழைய குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் தயார் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தேகத்தின்பேரில் அகமதுபாஷாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அவர் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி யில் ஈடுபட திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதுபாஷாவை கைது செய்தனர்.

அவரை அன்று மாலை குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்த டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன் ஆகியோர் அழைத்து சென்ற னர். வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட், அவரை 15 நாள் காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அகமது பாஷாவை ஒரு ஆட்டோவில் அழைத்து கொண்டு போலீசார் வந்துள்ளனர்.

இரவு 8 மணி அளவில் குடியாத்தம் தீயணைப்பு நிலையம் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கிய பின்னர், அகமதுபாஷாவை அழைத்து கொண்டு சப்-இன்ஸ்பெக்ட ர்கள் குடியாத்தம் கிளை சிறைச்சாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

தீயணைப்பு நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலக வளாக பகுதியில் உள்ள சிறைச்சாலைக்கு செல்லும் பாதை இரவில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி யும், இருட்டாகவும் காணப் படும். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அகமதுபாஷா திடீ ரென போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கூச்சலிட்டவாறே கைதியை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் ஆட்கள் நட மாட்டம் இன்றி இருந்ததால் அகமதுபாஷா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தப்பி ஓடிய சிறைக் கைதியை பிடிக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், செங்குட்டுவன் உள்ளிட்ட போலீசார் இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இருப் பினும் தப்பி ஓடிய அகமதுபாஷாவை பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வெங்கடேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தர விட்டார்.

மேலும் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டு பெங்களூரு, சித்தூர், மதனப்பல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Next Story