அமித்ஷா வருகிற 25-ந் தேதி பெங்களூரு வருகை


அமித்ஷா வருகிற 25-ந் தேதி பெங்களூரு வருகை
x
தினத்தந்தி 8 Sep 2018 10:45 PM GMT (Updated: 8 Sep 2018 10:45 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 25-ந் தேதி பெங்களூருவுக்கு வருகிறார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இப்போதிருந்தே நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 25-ந் தேதி பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார்.

மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடப்பதால், நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தவும், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து கர்நாடக தலைவர்களிடம் கருத்துகளை பெறவும் அமித்ஷா திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் பெங்களூருவுக்கு வருகை தருகிறார்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக அமித்ஷா கர்நாடகத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருந்தார். சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு முதல் முறையாக அவர் கர்நாடகத்திற்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.


Next Story