மதுரையில் அண்ணா பஸ் நிலையம் அருகே கருணாநிதிக்கு சிலை - மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை,
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையம் அருகே ஆவின் பால் பண்ணை சாலை சந்திப்பில் அவரது சிலை வைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம். சிலை விவரம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.
அமைதி பேரணி தற்போது தான் நடந்து முடிந்துள்ளது. எனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story