மாவட்ட செய்திகள்

மாமூல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது + "||" + Famous Rowdy arrested

மாமூல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது

மாமூல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது
வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி மாமூல் கெட்டு மிரட்டிய வழ்க்கில் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர், 

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 17–வது பிளாக்கை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி நாகேந்திரனின் தம்பி ஆவார். இவர் வழிப்பறி, ஆள் கடத்தல் என குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். 

பிரபல ரவுடியான முருகன் மீது வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில்  40–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

இந்த நிலையில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் கறி கடை நடத்தி வரும் செபந்திராஜ் (50) என்பவரிடம் முருகன் மாமூல் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், மாமூல் தரவில்லையென்றால் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செபந்திராஜ் வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல்லில் பரபரப்பு: பெண் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி கைது
திண்டுக்கல்லில், பெண் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.