தாமிர தாது நிறுவனத்தில் அதிகாரி பணிகள்
தாமிர தாது நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 177 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் காப்பர் லிமிடெட். தாமிர தாதுவளங்களை ஆராய்வது, உற்பத்தி செய்து சுத்திகரிப்பது, தாமிரம் தயாரிப்பது வினியோகம் உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனம் மினிரத்னா அந்தஸ்து பெற்றது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் தரத்திலான பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
நிர்வாக இயக்குனர், பொது மேலாளர், துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் தரத்திலான பணியிடங்கள் உள்ளன. மைனிங், ஜியாலஜி, சர்வே, கான்சென்ட்ரேட்டர், மெட்டலர்ஜி, கெமிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், அட்மினிஸ்ட்ரேசன், சட்டம், நிதி, விற்பனைப் பிரிவு, மொழிப்பிரிவு உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 177 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
மைனிங், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல் போன்ற என்ஜினீயரிங் தொழில்நுட்ப படிப்புகள், முதுநிலை ஜியாலஜி, பி.பி.ஏ., வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலை-அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்குப் பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது.
35 வயது முதல் 57 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சமீபத்தில் படித்து முடித்த வர்களுக்கு சில பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-9-2018 முதல் 6-10-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.hindustancopper.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story