மத்திய அரசு நிறுவனத்தில் வேலை


மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 11 Sep 2018 5:35 AM GMT (Updated: 11 Sep 2018 5:35 AM GMT)

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று பிராட்காஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் (பி.இ.சி.ஐ.எல்.).

ஒளிபரப்பு பொறியியல் நிறுவனமான இதில் தற்போது பேஷன்ட் கேர் மேனேஜர், பேஷன்ட் கேர் கோஆர்டினேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 105 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

35 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளது. லைப் சயின்ஸ், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட், இளநிலை பட்டம் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிரைவர் பணி உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி 17-9-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். எஸ்.சி/.எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.250 செலுத்தினால் போதுமானது. இது பற்றிய விரிவான விவரங்களை அறிய http://www.becil.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். 

Next Story