மத்திய அரசு துறைகளில் 1136 பணியிடங்கள்
மத்திய அரசு துறைகளில் பேஸ்-4 பணியிடங்களுக்கு 1136 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) மத்திய அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகளில் ஒன்றாக விளங்கு கிறது. தற்போது இந்த அமைப்பு, மத்திய அரசு துறைகளில் உள்ள நான்காம் நிலை (பேஸ்-4) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1136 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதிகபட்சமாக ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 115 பேரும், சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு 99 பேரும், டேட்டா பிராஸசிங் அசிஸ்டன்ட் பணிக்கு 48 பேரும், அசிஸ்டன்ட் பிளான்ட் புரோடக்சன் அதிகாரி பணிக்கு 68 இடங்களும், லேப் அட்டன்டன்ட் பணிக்கு 69 இடங்களும், டெக்னிக்கல் ஆபரேட்டர் பணிக்கு 201 இடங்களும், மெடிக்கல் அட்டன்டன்ட் பணிக்கு 36 பேரும், கேண்டீன் அட்டன்டன்ட் பணிக்கு 115 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இன்வெஸ்டிகேட்டர், சப் எடிட்டர், பெர்ட்டிலைசர் இன்ஸ்பெக்டர், டயட்டீசியன், ஜியோகிராபர், சீனியர் டிரான்ஸ்லேட்டர், லாங்வேஜ் இன்ஸ்ட்ரக்டர், டெக்ஸ்டைல் டிசைனர், டிராப்ட்ஸ்மேன், டெபுடி ரேஞ்சர், போர்மேன், கிளார்க் உள்ளிட்ட இன்னும் ஏராளமான பணியிடங்களும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த துறையில் பணிக்குத் தேவையான வயது நிர்ணய வரம்பை விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டும். 1-8-2018-ந் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டு களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணம் செலுத்த கடைசிநாள் 3-10-2018-ந் தேதியாகும்.
தேர்வு செய்யும் முறை
கணினி அடிப்படையில் கொள்குறி வினாவிடைத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssconline.nic.in,www.ssc.nic.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.

Related Tags :
Next Story