தேசிய செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி, வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம் + "||" + Woman of a sexually transmitted virgin, letter to the Vatican representative

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி, வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி, வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி, வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பேராயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
கொச்சி,

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கன்னியாஸ்திரி புகார் மீதான விசாரணை, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் கேரள மந்திரி இ.பி.ஜெயராஜன் நேற்று கூறினார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலதடவை கற்பழித்துள்ளார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?

பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். ஆகவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பலாத்கார வழக்கில் சிக்கிய பேராயரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பேராயரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2. 10-ம் வகுப்பு மாணவி 4 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் கர்ப்பத்தை கலைக்க முயன்ற பள்ளி நிர்வாகி- மனைவி கைது
10-ம் வகுப்பு மாணவி 4 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் கர்ப்பத்தை கலைக்க முயன்றதாக பள்ளி நிர்வாகி- அவரது மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. சிறுமி கடத்தி செல்லப்பட்டு 28 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்
ஒடிசா சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 28 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
4. மோடிஜி ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு என்கிறீர்கள், எப்படி செய்யப்போகிறீர்கள்’ தாய் கண்ணீர் பேட்டி
அரியானாவில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
5. கேரளா: கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் பேராயருக்கு போலீசார் சம்மன்
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரின் பேரில் பேராயருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.