மாவட்ட செய்திகள்

வயதான தம்பதியர் தற்கொலை யார் அவர்கள்? போலீசார் விசாரணை + "||" + Who are the elderly couple who commit suicide? Police investigation

வயதான தம்பதியர் தற்கொலை யார் அவர்கள்? போலீசார் விசாரணை

வயதான தம்பதியர் தற்கொலை யார் அவர்கள்? போலீசார் விசாரணை
சாத்தூர் அருகே வயதான தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர், 


சாத்தூர் அருகே காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று வயதான ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். மாலையில் அந்தப்பக்கமாக சென்ற ஒருவர் இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து சாத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் அங்கு சென்றனர். இருவரது உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. எனவே இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் மேலும் இருவரும் கணவன்-மனைவியாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

இருவரது உடலையும் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அந்த தம்பதியினர் யார் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. வெளியூரில் இருந்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தற்கொலை செய்திருக்கலாமென்று தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை அருகே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர், போலீஸ் விசாரணை
சிவகங்கை அருகே ரெயில் தண்டவாளத்தில் பட்டதாரி வாலிபர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. தற்கொலைக்கு அனுமதி கேட்டு என்.எல்.சி. ஒப்பந்ததாரரின் குடும்பத்தினர் போராட்டம்
கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு மகன், மருமகளுடன் என்.எல்.சி. ஒப்பந்ததாரரின் மனைவி கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
காதல் விவகாரத்தில் தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
5. தொட்டியம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தொட்டியம் அருகே, ‘தேர்வுக்கு படி’ என்று தந்தை திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.