காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள ஜார்கிகோளி சகோதரர்களை நான் சமாதானப்படுத்துவேன் குமாரசாமி பேட்டி
காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியை சேர்ந்த ஜார்கிகோளி சகோதரர்களை நான் சமாதானப்படுத்துவேன் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரு,
காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியை சேர்ந்த ஜார்கிகோளி சகோதரர்களை நான் சமாதானப்படுத்துவேன் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.
முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை மைசூருவுக்கு வந்தார். மைசூரு கலாமந்திராவில் நடந்த புகைப்பட கண்காட்சியை குமாரசாமி ெதாடங்கி வைத்தார். பின்னர் வெளியே வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சமாதானப்படுத்துவேன்
என்னுடைய தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக பா.ஜனதா தலைவர்கள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அவர்களின் (பா.ஜனதா) சதி திட்டம் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டு இருக்கவில்லை. மாநில பிரச்சினைகளை தீர்க்க தான் நான் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறேன்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சதீஸ் ஜார்கிகோளி, ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோருக்கு ஆட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. அவர்களின் கட்சி மீது தான் அவர்களுக்கு அதிருப்தி உள்ளது. இது சரியாகி விடும். ஜார்கிகோளி சகோதரர்களை நான் சமாதானப்படுத்துவேன்.
மேகதாது அணை கட்டும் திட்டம்
பிரதமர் மோடியை சந்தித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். மழை சேத விவரங்களையும் அவருக்கு அறிக்கையாக வழங்கி உள்ளேன். மத்திய அரசு, தக்க நிவாரணம் வழங்க வேண்டும்.
குடகு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாகவும், விவசாயிகள் பிரச்சினை தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் பேசியுள்ளேன்.
ஆலோசனை கூட்டம்
பெட்ரோல்-டீசல் மீதான ‘செஸ்’ வரியை குறைப்பது தொடர்பாக மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாளை (அதாவது, இன்று) உயர் அதிகாரிகள், மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story