விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.ஐ.ஜி. தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை


விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.ஐ.ஜி. தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 11 Sep 2018 11:30 PM GMT (Updated: 11 Sep 2018 10:57 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. சந்திரன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாப் பேரவை சார்பில் சுமார் 200 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் வருகிற 17-ந்தேதி சிலைகளை கரைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றையதினம் பிற்பகலில் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமையக கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு டி.ஐ.ஜி. சந்திரன் தலைமை தாங்கினார்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஷ்குமார் பன்வால், அபூர்வா குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்ரகீம், ரக்‌ஷனாசிங், மாறன், ரங்க நாதன், ஜிந்தாகோதண்டராமன், வீரவல்லபன் உள்பட போலீஸ் அதிகரிகள் பலர் கலந்துகொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிலைகள் வைக்கப்படும் இடங்களில் கண் காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் இதை உறுதி செய்யுமாறு போலீஸ் அதிகாரிகளை டி.ஐ.ஜி. சந்திரன் வலியுறுத்தினார்.

சிலைகளின் பாதுகாப்புக்கு விழாக்கமிட்டியினரை பயன்படுத்துவது, பிரச்சினைகள் ஏற்படாதவாறு சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து போலீசாருக்கு டி.ஐ.ஜி. சந்திரன் ஆலோசனை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா மற்றும் போலீஸ் அதிகாரிகள், விநாயகர் விழா சதுர்த்தி பேரவை நிர்வாகிகளுடன் சென்று விநாயகர் சிலைகளை கரைக்கும் கடற்கரை பகுதியை பார்வையிட்டார்.

Next Story