வானவில் : கனவை நினைவூட்டும் கருவி


வானவில் : கனவை நினைவூட்டும் கருவி
x
தினத்தந்தி 12 Sept 2018 11:32 AM IST (Updated: 12 Sept 2018 11:32 AM IST)
t-max-icont-min-icon

நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு காண்கிறோம். ஆனால் உறக்கத்தில் இருந்து விழித்தவுடன் நம் கனவுகள் நினைவில் இருப்பதில்லை.

அப்படியே ஞாபகம் வந்தாலும் முழுமையாக வராது. ஆனால் நம் கனவுகளை தெளிவாக நினைவில் வைத்துக் கொள்வதற்காகவே வந்துள்ளது ‘இன்ஸ்டா ட்ரீம்மெர் பேண்ட்’.

‘பார்ரா! தொழில்நுட்பம் இதெல்லாம் கூட நிகழ்த்துமா!’ என்று நம் புருவங்களை உயர வைக்கிறது இந்த பேண்ட்.

இந்த பேண்ட்டை நாம் தூங்கும் போது நமது கையில் கடிகாரத்தை போல அணிந்துக் கொள்ள வேண்டும். பாவ்லோவின் தியரி (pavlovian conditioning) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த பேண்ட். சிறிய அதிர்வலைகள் மூலம் நமது மூளையை பழக்கப்படுத்துகிறது. இதனால் தூக்கம் பாதிக்கும் என்று அஞ்ச வேண்டாம். ஆழ்ந்த தூக்கத்தில் காணும் கனவுகளை மறக்காமல் இருக்கச் செய்து ஒரு புது அனுபவத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

நமது கனவுகளை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. அதாவது நம் கனவு உலகத்தில் நடப்பவைகளில் நாம் பங்கேற்க முடியும். இதனால் உற்சாகத்துடன் காலையில் விழித்தெழலாம். அது மட்டுமின்றி நாம் எப்போது ஆழ்ந்து உறங்கினோம், எந்த நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்பட்டோம் என்பதை கூடச் இந்த பேண்ட் சொல்லிவிடும்.

நான்கு விதமான அழகிய வண்ணங்களில் கிடைக்கிறது, இந்த இன்ஸ்டா ட்ரீம்மெர் பேண்ட். 

Next Story