வானவில் : லேசர் கீ-போர்டு
கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டில் செய்துவிட முடியும்.
அந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இருப்பினும் கம்ப்யூட்டர் கீ-போர்டில் வேகமாக டைப்பிங் செய்வதை போன்று ஸ்மார்ட்போனிலும், டேப்லெட்டிலும் டைப் செய்ய முடியாது. ஸ்மார்ட்போனின் தொடுத்திரை சிறிதாக இருப்பதால், கம்ப்யூட்டரில் வேகமாக டைப்பிங் செய்யக் கூடியவர்கள் கூட, ஸ்மார்ட்போனில் நிதானமாகத்தான் டைப் செய்கிறார்கள். இந்த பிரச்சினைக்கும், நவீன தொழில்நுட்பம் தீர்வு வழங்கியுள்ளது.
லேசார் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கீ-போர்ட்டை ஸ்மார்ட்போனிலும், டேப்லெட்டிலும் புளூடூத் மூலமாக இணைத்து, கம்ப்யூட்டர் கீ-போர்ட் போலவே பயன்படுத்த முடியும். இதை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டில் இணைத்துவிட்டால் போதும், ஒரு மாய தோற்றத்திலான சிவப்பு ஒளி கீ-போர்ட் நம் முன் தோன்றும். அந்த ஒளி மூலம் தகவல்களை டைப் செய்யலாம். நீங்கள் டைப் செய்யும் விவரங்கள் அனைத்தும் டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் திரையில் பதிவாகும்.
இந்த கீ போர்டை சம தளத்தில் வைத்து செயல்படுத்த வேண்டும். சமதளமாக இல்லாவிடில் இது சப்தமெழுப்பும். இதில் புளூடூத் ஸ்பீக்கரும் உள்ளது. இதன் மூலம் குரல் வழி பதிவு மற்றும் இனிமையான இசையைக் கேட்டு மகிழ முடியும். இதில் ஆயிரம் எம்.ஏ.ஹெச். பேட்டரி பயன்படுத்தப்பட்டிருப்பதால் இது நீண்ட நேரம் செயல்படும். பாக்ஸ் வடிவில் காட்சியளிக்கும், இந்த லேசர் கீ-போர்ட் 136 கிராம் எடை கொண்டது. முன்னர் ரூ. 5,746-க்கு விற்பனைக்கு வந்த இந்த கீ-போர்ட் இப்போது 23 சதவீத தள்ளுபடி விலையில் அமேசான் இணையதளத்தில் ரூ. 4,420-க்கு கிடைக்கிறது.

Related Tags :
Next Story