மாவட்ட செய்திகள்

வானவில் : மாயக் கண்ணாடி + "||" + Vanavil : Magic glass

வானவில் : மாயக் கண்ணாடி

வானவில் :  மாயக் கண்ணாடி
முகம் காட்டும் கண்ணாடிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. நவீன யுகத்தில் நவீன வசதிகள் கொண்ட கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வரிசையில் வந்தது தான் ‘ஐ-ஹோம் வேனிடி மிரர்’ எனப்படும் நவீன கண்ணாடி. இதை மாயக்கண்ணாடி என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த கண்ணாடி இருட்டான இடத்திலும் நம் முகத்தை பளிச்சென காட்டும்.

ஏனெனில் இந்த கண்ணாடியில் பளிச்சிடும் ஒளி விளக்குகள் இருப்பதால், இருட்டான இடங்களிலும் தெளிவாக முகம் பார்க்க முடியும். இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இனிய இசையைக் கேட்டு மகிழலாம்.

இதில் புளூடூத் ஸ்பீக்கர் போன் இருப்பதால் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் உரையாட முடியும். முதலில் ரூ. 34,063 விலையில் இருந்த இந்த தயாரிப்பு அமேசான் இணையதளத்தில் 23 சதவீத தள்ளுபடியில் ரூ. 26,202-க்கு கிடைக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : கூகுளின் பிக்ஸெல் ஸ்லேட்
வித்தியாசமாக, மற்றவர்களைவிட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக தனது தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் கவனமாக உள்ளது.
2. வானவில் : டெல் ஏலியன்வேர் அறிமுகம்
கம்ப்யூட்டர், லேப்டாப் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டெல் நிறுவனம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கேற்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
3. வானவில் : நவீன தோட்டக்காரன்
இப்போது எல்லாமே நவீனம்தான். இதற்குக் காரணமே ஆள் பற்றாக்குறை. நகர்பகுதிகளில் தோட்டம் அமைப்பது கொஞ்சம் சிரமம்.
4. வானவில் : நான்கு கேமராக்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 9 அறிமுகம்
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரிய நிறுவனமான சாம்சங் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனின் பின்பகுதியில் 4 கேமராக்களுடன் அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நோரியா காம்பாக்ட் ஏர் கண்டிஷனர்
பொதுவாக ஏர் கண்டிஷனர் வாங்குவது என்ற உடனேயே அதை எங்கே பொறுத்துவது என்ற பிரச்சினை எழும்.