மோடி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இருந்து டெல்லிக்கு வாகன பேரணி


மோடி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் இருந்து டெல்லிக்கு வாகன பேரணி
x
தினத்தந்தி 13 Sept 2018 4:15 AM IST (Updated: 13 Sept 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

‘பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’ என்ற கோ‌ஷத்தை வலியுறுத்தி சட்ட உரிமைகள் குழுவின் பொதுச்செயலாளர் ராஜலட்சுமி மந்தா தலைமையில் 30 பேர் சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று விழிப்புணர்வு வாகன பேரணி சென்றனர்.

சென்னை, 

‘பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்’ என்ற கோ‌ஷத்தை வலியுறுத்தி சட்ட உரிமைகள் குழுவின் பொதுச்செயலாளர் ராஜலட்சுமி மந்தா தலைமையில் 30 பேர் சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று விழிப்புணர்வு வாகன பேரணி சென்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வாகன பேரணியை ‘டீம் இந்தியா’ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளான பரத் போ‌ஷன், பாபுலால் கோல்சா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ராஜலட்சுமி மந்தா தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் ஒரு வேன் என மொத்தம் 5 வாகனங்களில் புறப்பட்டனர். இவர்கள் 13 மாநிலங்கள் வழியாக, 3 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து டெல்லி சென்றடைகிறார்கள். இந்த குழுவில் ‘டீம் இந்தியா’ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும், பா.ஜ.க. மாணவர் அணியை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

வாகன பேரணியின்போது பெண்களுக்காக பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து சுமார் 7 லட்சம் பேருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும் என்று அந்த குழுவினர் தெரிவித்தனர். சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த குழுவினர் முதலில் புதுச்சேரிக்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு செல்கின்றனர். இதையடுத்து வருகிற 23–ந் தேதி டெல்லியை அடைகின்றனர்.

Next Story