மாவட்ட செய்திகள்

சாராயம் விற்ற 2 பேர் கைது + "||" + Two people arrested for selling booze

சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றத்தை அடுத்த கருமாரப்பாக்கம் பகுதியில் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட தேசுமுகிப்பேட்டை பகுதியை சேர்ந்த  குப்பம்மாள் (வயது 63) மற்றும் டில்லிபாபு (35) ஆகியோர் தலா 1,050 பாக்கெட்டுகள் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.