மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் அருகேமோட்டார் சைக்கிள்– கார் மோதல்; கொத்தனார் பலி + "||" + Motorcycle-car collision; Bricklayer Kills

மாமல்லபுரம் அருகேமோட்டார் சைக்கிள்– கார் மோதல்; கொத்தனார் பலி

மாமல்லபுரம் அருகேமோட்டார் சைக்கிள்– கார் மோதல்; கொத்தனார் பலி
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்– கார் மோதிய விபத்தில் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூரை அடுத்த மானாமதி ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 58), கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் மாமல்லபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தனது மோட்டார் சைக்கிளில் தேவனேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பின் இருக்கையில் வாணி  அமர்ந்து இருந்தார். 

தேவனேரி சந்திப்பு குறுக்கே சாலையை கடக்கும்போது, புதுச்சேரி நோக்கி சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

 இதில் வீரராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த வாணி சிகிச்சைக்காக 

செங்கல்பட்டு அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

 இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.