திருப்போரூர் அருகே போலீஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
திருப்போரூர் அருகே காவலர் குடியிருப்பில் உள்ள போலீஸ் அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
திருப்போரூர்,
திருப்போரூர் மாம்பாக்கம் அருகே உள்ள மேலைக்கோட்டையூர் பகுதியில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் போலீசார் வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
காவலர் குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள காவல்துறையின் அதிகாரியான தேசிங்கு ராஜன்(வயது43) வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் காலையில் பணிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
15 பவுன் நகை கொள்ளை
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். காவலர் குடியிருப்பில் பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story