மாவட்ட செய்திகள்

கோவையில் 18-ந் தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் + "||" + DMK Multitudes will participate in the demonstration, Municipal executives meeting resolution

கோவையில் 18-ந் தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும் மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

கோவையில் 18-ந் தேதி நடைபெறும்
தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்
மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
கோவையில் வருகிற 18-ந் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக அரசில் ஊழலில் தொடர்புடையவர்களை பதவி விலக வற்புறுத்தியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

குடிநீர் வினியோக முறை

அண்ணா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தி.மு.க. உதயமான நாள் என முப்பெரும்விழா விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதில் கோவை மாநகர தி.மு.க.வினர் அதிக அளவில் கலந்து கொள்வது. கோவைக்கு குடிநீர் வழங்கும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்த பின்னரும் கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே சீரான குடிநீர் வினியோக முறையை அளிக்க கோவை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்படுத்துதல் திட்டம் என்ற பெயரில் குளக்கரைகளை வலுப்படுத்தும் போது குளங்களின் பரப்பளவை குறைக்கக் கூடாது. அப்படி குளங்களின் பரப்பளவை குறைத்து நீதிமன்றங்களின் உத்தரவுக்கு எதிராக கோவை மாநகராட்சி செயல்பட்டால் கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மெட்டல்மணி, நாச்சிமுத்து, நந்தகுமார், குமரேசன், பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, கணேஷ்குமார், கோட்டை அப்பாஸ், ஆர்.எஸ்.புரம் பூபாலன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோர்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி போலி மது தாராளம்
கோவையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 24 மணி நேரமும் போலி மது விற்பனை செய்யப்படுகிறது.
2. கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.
3. கோவைக்கு பயிற்சி பெற வந்த அசாம் வன அதிகாரி கடத்தப்பட்டாரா? தீவிர தேடுதல் வேட்டை
கோவைக்கு பயிற்சிபெற வந்த அசாம் வன அதிகாரி மாயமானார். அவர் கடத்தப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
5. அவினாசி ரோடு மேம்பாலத்தில் தடுப்புசுவர் கட்டும் பணி தொடக்கம்
கோவை அவினாசி ரோடு மேம்பாலம் ரவுண்டானாவில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது.