விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம்


விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:33 PM GMT (Updated: 12 Sep 2018 10:33 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் களிமண் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஆங்காங்கே வைத்து பூஜை செய்யப்பட்ட பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அதன் பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மாவட்டத்தில் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சிவகங்கை மற்றும் இந்திரா நகர் பகுதியில் வைக்கப்படும் சிலைகள் கீழவாணியங்குடியிலும், காளையார்கோவில் பகுதியில் வைக்கப்படும் சிலைகள் தெப்பக்குளம் கீழ்புறம் பகுதியிலும், மானாமதுரை பகுதியில் வைக்கப்படும் சிலைகள் அலங்காரக்குளத்திலும், தேவகோட்டை பகுதியில் வைக்கப்படும் சிலைகள் கருத்தா ஊருணியிலும் கரைக்க வேண்டும்.


இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் வைக்கப்படும் சிலைகள் சங்கியாண்டி கோவில் ஊருணியிலும், கல்லல் பகுதியில் வைக்கப்படும் சிலைகள் தெப்பக்குளத்திலும், காரைக்குடி பகுதியில் வைக்கப்படும் சிலைகள் கீழ ஊருணியிலும், சாக்கோட்டை பகுதியில் வைக்கப்படும் சிலைகள்(சோளாங்குளம்) ஸ்ரீசாக்கை வீரசேகர உமையாம்பிகை கோவில் எதிர்புறமும், சிங்கம்புணரியில் வைக்கப்படும் சிலைகள் சேவுக மூர்த்தி கோவில் தெப்பக்குளத்திலும், சிங்கம்புணரி நாகமங்கலம் பகுதியில் வைக்கப்படும் சிலைகள் வெள்ளைப் பள்ளம் ஊருணியிலும் கரைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story