மாவட்ட செய்திகள்

மகன் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தந்தை மரணம்உறவினர்கள் சோகம் + "||" + Shortly after the son's marriage Father dies

மகன் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தந்தை மரணம்உறவினர்கள் சோகம்

மகன் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் தந்தை மரணம்உறவினர்கள் சோகம்
மகனின் திருமணம் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்ததால் மண விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் அருகே மொண்டிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் தவசி (வயது 55). அவருடைய மகன் ஆனந்தகுமாரின் திருமணம் உத்தப்பநாயக்கனூரில் நேற்று நடந்தது.

திருமண விழாவுக்கு உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். திருமணம் முடிந்த சற்று நேரத்தில் தவசி திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

பரிதாப சாவு

துரதிர்ஷ்டவசமாக தவசி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தவசி இறந்த தகவல் அறிந்ததும் கலகலப்பாக இருந்த திருமண விழா சோகமயமாக மாறியது. தவசியின் உடலை பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மகன் திருமணம் முடிந்த சற்று நேரத்தில் தந்தை மாரடைப்பில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.