நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை,
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதிய பாலம்
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதனால் பழைய பாலத்துக்கு இணையாக தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. இந்த பாலம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள ஆற்றின் கரையில் தொடங்கி தேவர் சிலை அருகே இணையும் வகையில் அமைக்கப்படுகிறது. 237 மீட்டர் நீளமும், 14.8 அகலத்துடனும் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
பணிகள் தீவிரம்
இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கரையின் இரு புறங்களிலும் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் மின்னொளியில் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது தூண்கள் அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் “டெக்” எனப்படும் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணியை விரைவில் முடிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Related Tags :
Next Story