மாவட்ட செய்திகள்

சதுர்த்தி விழா கோலாகலம்:503 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடுகோவில்களில் சிறப்பு பூஜை + "||" + Keep Vinayaka statues in 503 places Devotees worship Special prayer in temples

சதுர்த்தி விழா கோலாகலம்:503 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடுகோவில்களில் சிறப்பு பூஜை

சதுர்த்தி விழா கோலாகலம்:503 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடுகோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி, நெல்லை மாவட்டத்தில் 503 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
நெல்லை, 

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நெல்லை மாவட்டத்தில் 503 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆலங்குளம், அம்பை, தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் விநாயகர் சிலைகள் நேற்று காலை வைக்கப்பட்டன.

நெல்லை மாநகர பகுதியை பொறுத்த வரையில் நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. சில இடங்களில் விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

503 விநாயகர் சிலைகள்

2 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு அந்தந்த பகுதி மக்கள் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சில இடங்களில் விநாயகருக்கு படையல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 445 சிலைகளும், மாநகர பகுதியில் 58 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 503 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒரு சில இடங்களில் உள்ள சிலைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விநாயகர் சிலைகள் ஏற்கனவே நெல்லை மாவட்டம் சார்பில் அறிவிக்கப்பட்ட இடங்களில் கரைக்கப்படுகின்றன. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள சிலைகள் நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து அம்மன் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகின்றன.

சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நெல்லை மணிமூர்த்தீசுவரத்தில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோவில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வாரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை டவுன் லாலாமுக்கு கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலை சிறப்பு ஹோமம், லட்சுமி பூஜை நடந்தது. அங்கு வந்த பக்தர்களுக்கு புளியோதரை, கொழுக்கட்டை ஆகியவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள விநாயகர் சிலை, நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில், பாளையங்கோட்டை தியாகராஜநகர் விக்னவிநாயகர் கோவில், பேட்டை ரொட்டிக்கடை நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...