மாவட்ட செய்திகள்

மதுரை தொழில் அதிபர் வீட்டில் புகுந்து துணிகரம்: 57 பவுன் நகை-பணம் கொள்ளை + "||" + Madurai entrepreneur enters house at home: 57 pound jewelry-money robbery

மதுரை தொழில் அதிபர் வீட்டில் புகுந்து துணிகரம்: 57 பவுன் நகை-பணம் கொள்ளை

மதுரை தொழில் அதிபர் வீட்டில் புகுந்து துணிகரம்: 57 பவுன் நகை-பணம் கொள்ளை
மதுரையில் தொழில் அதிபரின் வீட்டில் புகுந்து 57 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை, 


மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமல் ஹமீது (வயது 42), தொழில் அதிபர்.
இவருடைய மகன் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த விருது வழங்கும் விழா இலங்கை நாட்டில் நடைபெற்றது. விருதை வாங்குவதற்காக ராஜ்கமல் ஹமீது தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்றார்.

அங்கிருந்து திரும்பி வந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 57 பவுன் நகைகள் மற்றும் ரூ.92 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய், கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச் சென்றது. பின்னர் திரும்பி வந்தது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைவரிசை காட்டிய மர்ம கும்பலை தீவிரமாக தேடிவருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை ராமலிங்கம் நகர், பார்க் டவுன் 1-வது தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (63). இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. மனைவியை ஏமாற்ற 10 பவுன் நகைகளை பறித்து சென்றதாக நாடகமாடிய புரோக்கர் சிக்கினார்
மனைவியை ஏமாற்ற 10 பவுன் நகைகளை பறித்து சென்றதாக நாடகமாடிய புரோக்கர் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. புரோக்கரை கத்தியால் கீறி 10 பவுன் நகைகள் பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
திருச்சி பொன்மலையில் புரோக்கரை கத்தியால் கீறி 10 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. நாச்சியார்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பேர் கைது 89 பவுன் நகைகள் பறிமுதல்
நாச்சியார்கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 89 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
4. வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரம் பறிப்பு - பட்டதாரி வாலிபர் கைது
வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரத்தை பறித்துச்சென்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. தஞ்சையில், பல்பொருள் அங்காடி பூட்டை உடைத்து பணம்-மளிகைப்பொருட்கள் திருட்டு
தஞ்சையில், பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து பணம்-மளிகைப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.