மாவட்ட செய்திகள்

அரியலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது + "||" + School in Ariyalur For students Bicycle competition The next day is going on

அரியலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது

அரியலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது
அரியலூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
அரியலூர்,

அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் 13, 15, 17 ஆகிய வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள்போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும்.


மாணவ-மாணவிகள் பள்ளியில் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். மாணவ-மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 6, 7, 8-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 9, 10-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 11, 12-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள், முதல் பத்து இடங்களை பெறுபவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டமைக்கான தகுதி சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்.

எனவே, பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது வயது சான்றிதழ்களுடன் வருகை தந்து போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) நேற்று மாலை அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி- மயக்கம்
வி.கைகாட்டி அருகே அரசு பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
3. பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள்
பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நேற்று நடந்தது.
4. அரியலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி அரியலூர் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு வக்கீல் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...