மாவட்ட செய்திகள்

தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லூரியில்கணித மின்னணுவியல் துறை கருத்தரங்கு + "||" + Dharmapuri Vijay Vidyalaya College Seminar on Mathematical Electronics Department

தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லூரியில்கணித மின்னணுவியல் துறை கருத்தரங்கு

தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லூரியில்கணித மின்னணுவியல் துறை கருத்தரங்கு
தர்மபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் கணித மின்னணுவியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது.
தர்மபுரி,

இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். தாளாளர் செல்வி மணிவண்ணன், இயக்குனர்கள் தீபக் மணிவண்ணன், ஸ்ரவந்தி தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஹமீதாபானு வரவேற்று பேசினார். கணித துறை தலைவர் வேலுசாமி, கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

இதில் கல்லூரி மாணவிகள், கணித மின்னணுவியல் துறையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதனை கல்லூரி நிர்வாக அலுவலர் கே.விக்கிரமன் பார்வையிட்டு பாராட்டினார். இந்த கருத்தரங்கில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் பாலசுந்தரம் நன்றி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை