கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2018 3:45 AM IST (Updated: 14 Sept 2018 10:29 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி தாலுகாக அலுவலம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சிவகாசி,

அரசாணைப்படி 40 சதவீதம் ஊனமுள்ள அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி தாலுகாக அலுவலம் முன்பு நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சிவகாசி நகர தலைவர் நாகூர்கனி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அய்யாச்சாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன், முருகன், சந்தானம், மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story