அரசு மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் டாக்டரை நியமிக்க வேண்டும்


அரசு மருத்துவமனையில் இருதய நோய் பிரிவில் டாக்டரை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2018 9:45 PM GMT (Updated: 14 Sep 2018 6:53 PM GMT)

கம்பம் அரசு மருத்துவமனையில், இருதய நோய் பிரிவில் சிறப்பு டாக்டரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம், 

கம்பத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கம்பம், கூடலூர், காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக மக்கள் வருகின்றனர். மேலும் கேரளாவில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, வண்டன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். அந்த வகையில் 1,000-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 100-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இங்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக பொது மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு, கர்ப்பிணிகளுக்கான சீமாங் சென்டர், அவசர சிகிச்சை பிரிவு, தொற்றுநோய் பிரிவு என சுமார் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. .

ஆனால் இருதய நோய் பிரிவில் சிறப்பு டாக்டர் இல்லை இதனால் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் கம்பம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். சில நேரங்களில் ஆம்புலன்சில் தேனிக்கு கொண்டு செல்லும் போது உயிரிழப்பு ஏற்படுகின்றது.

எனவே அனைத்து வசதிகளும் உள்ள கம்பம் அரசு மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு டாக்டரை நியமித்து சிகிச்சை அளிக்க மாவட்ட மருத்துவத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பம் சுற்று வட்டார பகுதி மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story