5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு


5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 15 Sept 2018 3:15 AM IST (Updated: 15 Sept 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை, உயரங்களை சரிபார்த்து அதற்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை, உயரங்களை சரிபார்த்து அதற்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

எடை, உயரம் சரிபாக்கும் பணி 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களால் அந்த பகுதியில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிட்டு சாரிபார்க்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

வருங்காலத்தை நிர்வாகிக்க கூடிய இன்றைய குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த சமூகத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரத்த சோகையை தடுப்பதற்கு சத்தான உணவு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சத்தான உணவு 

முதற்கட்டமாக எடை, உயரம் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று குழந்தைகளின் உடை, உயரம் ஆகியவற்றை உறுதி செய்து சத்தான உணவு வழங்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்கள், தங்கள் பகுதியில் 5 வயது உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எடை பார்க்க வேண்டும். குழந்தைகள், கார்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, தாசில்தார் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story