மாவட்ட செய்திகள்

தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் + "||" + Adidas may apply for use in the Tadco program

தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திண்டுக்கல், 


தாட்கோ திட்டத்தின் கீழ், 18 முதல் 65 வயது வரை உள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு, துரித மின் இணைப்பு, பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான வரம்பு ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, மருத்துவமையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கான வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை ஆகும். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி ஆகியவைகளுக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவி வழங்கப்படும். பொருளாதார கடனுதவி திட்டத்தொகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

கலெக்டர், வேளாண்மை இயக்குனர், தாட்கோ தலைவர் ஆகியோரின் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டய கணக்கர், செலவுக்கணக்கர் நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி, தையல் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்களில் பயன்பெறும் வகையில் ஆதிதிராவிடர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தாட்கோ இணையதள முகவரி மூலமாக (லீ௴௴ஜீ://ணீஜீஜீறீவீநீணீ௴வீஷீஸீ.௴ணீலீபீநீஷீ.நீஷீனீ) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது புகைப்படம், சாதி, வருமான சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, திட்ட அறிக்கை ஆகியவற்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தாட்கோ அலுவலகத்தில் கட்டணமாக ரூ.60 செலுத்தி விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 2 ஆயிரத்து 432 டன் விளைபொருட்கள் ஆன்லைன் சந்தையில் விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 432 டன் விளைபொருட்கள் ஆன்லைன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
2. விவசாயிகளிடம் இருந்து 1,600 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு - கலெக்டர் தகவல்
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 1,600 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
3. பாசனத்துக்காக பரப்பலாறு அணையில் தண்ணீர் திறப்பு - கலெக்டர் மலர் தூவினார்
பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் டி.ஜி.வினய் திறந்து வைத்தார்.
4. மலைக்கிராம மக்களுக்கு 5 மணி நேரம் நடந்து சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்
5 மணி நேரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் டி.ஜி.வினய் வழங்கினார்.
5. மாவட்டம் முழுவதும் 1-ந்தேதி முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை - கலெக்டர் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து வகை பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதித்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...