எரிசாராயம் விற்ற 4 பெண்கள் கைது


எரிசாராயம் விற்ற 4 பெண்கள் கைது
x
தினத்தந்தி 15 Sept 2018 3:00 AM IST (Updated: 15 Sept 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட எடையயூர் கிராமத்தில் எரிசாராயம் விற்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்பாக்கம்

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்படி திருக்கழுக்குன்றம் மது விலக்கு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை திருக்கழுக்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட எடையயூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராணி (வயது 65) என்பவர் வீட்டின் அருகே ஒரு கோணிப்பையில் 30 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து ராணியை கைது செய்தனர்.

நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி (65), வீட்டின் அருகே 25 லிட்டர் நீர் கலந்த எரிசாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், அதே பகுதியை சேர்ந்த பாக்கியம் (57) என்பவர் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். எச்சர் கிராமத்தில் கூட்டு ரோடு பகுதியில் முட்புதரில் மறைத்து வைத்திருந்த 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சுதா (38) என்பவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Next Story