கர்நாடகத்தில் 5 மாதங்களில் வணிக வரி ரூ.28,537 கோடி வசூல் முதல்-மந்திரி குமாரசாமி தகவல்


கர்நாடகத்தில் 5 மாதங்களில் வணிக வரி ரூ.28,537 கோடி வசூல் முதல்-மந்திரி குமாரசாமி தகவல்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:15 AM IST (Updated: 15 Sept 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 5 மாதங்களில் வணிக வரி ரூ.28,537 கோடி வசூலாகி இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 5 மாதங்களில் வணிக வரி ரூ.28,537 கோடி வசூலாகி இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

வரியை வசூலிக்க நடவடிக்கை

வணிக வரி, கலால், போக்குவரத்து, பதிவுத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் குமாரசாமி பேசியதாவது:-

சரக்கு-சேவை வரி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சரியான முறையில் வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவனம் செலுத்த வேண்டும்

அரசின் தொலைநோக்கு திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்த வேண்டுமென்றால் வரி வசூல் தீவிரமான முறையில் நடைபெற வேண்டும். அந்த திசையில் இந்த துறைகளின் அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

வணிக வரித்துறையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களில் ரூ.28 ஆயிரத்து 537 கோடி வரி வசூலாகியுள்ளது. செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு(2019) மார்ச் மாதம் வரை இன்னும் ரூ.38 ஆயிரத்து 383 கோடி வசூலாக வேண்டும்.

ரூ.4,332 கோடி வசூல்

இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.7 சதவீதம் அதிகம் ஆகும். கலால்துறையில் ரூ.19 ஆயிரத்து 750 கோடி வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை ரூ.8,150 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது ரூ.996 கோடி அதிகம் ஆகும்.

போக்குவரத்து துறையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு வரை ரூ.2,377 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.161 ேகாடி அதிகம் ஆகும். பதிவு மற்றும் அச்சுத்துறையில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை ரூ.4,332 கோடி வசூலாகியுள்ளது. கனிமம் மற்றும் நில அறிவியல் துறையில் இதுவரை ரூ.718 கோடி வசூலாகி இருக்கிறது.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

பொருளாதார ஆலோசகர்

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியின் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியா, செயலாளர் ஐ,.என்.எஸ்.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story