மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை மீட்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை + "||" + Take away the occupations and restore the tanks - public demand

ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை மீட்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை மீட்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
கொள்ளிடம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் குட்டைகளும், 100-க்கும் மேற்பட்ட கோவில் குளங்களும் உள்ளன. இதில் 350-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் உள்ளது. மேலும், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள், கொட்டகைகள் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன.


இந்த குளங்கள் கிராமங்களில் நிலத்தடிநீரை பாதுகாப்பதற்காகவும், கிராம மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் வெட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. மேலும், குளங்களால் நிலத்தடிநீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால் காலப்போக்கில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதற்கான தடயமே இல்லாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக நேரில் சென்று பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்துக்குள் புதைந்து கிடக்கும் குளங்களை மீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தொடர்புடைய செய்திகள்

1. அருப்புக்கோட்டையில் சாலைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
அருப்புக்கோட்டையில் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
2. பாளையங்கோட்டையில் ரூ.1 கோடி பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தொழுவம் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
பாளையங்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பிலான பூங்கா இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த தொழுவம் அகற்றப்பட்டது.
3. கால்வாய் கரையோரம் கட்டப்பட்ட 15 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
கால்வாய் கரையோரம் கட்டப்பட்ட 15 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
4. வெள்ளகோவில் பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் நெருக்கடி ஏற்படுவதாகவும்,இவை தடுக்கப்படவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 126 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கோவையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 126 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

அதிகம் வாசிக்கப்பட்டவை